அன்பார்ந்த பத்மசாலிய சொந்தங்களே, அனைவருக்கும் வணக்கம்.
தங்களில் பெரும்பான்மை சொந்தங்களுக்கு 2026-2029 ஆண்டுக்கான மாநில சங்க தேர்தல் நடைபெற உள்ளது என்பதை அறிந்து இருப்பீர்கள்.
கடந்த 09-11-2025-ந் தேதி மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு பத்மசாலியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் இணை ஆணையர்களாக எங்களை நியமித்ததை தொடர்ந்து, நாங்கள் பிரதி மாவட்டமும் ஒரு தேர்தல் அதிகாரியை வழங்கிட /பரிந்துரைத்திடவும் கேட்டிருந்தோம்.
உறவுகளே, தங்கள் கிளை மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு வரும் தேர்தல் அதிகாரிகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பு அளிக்க இதன் மூலம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
முதல் கட்டமாக கிளைச் சங்கத்திலும் அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மாவட்டத்திலும் தேர்தல்கள் நடைபெற உள்ளது. மூன்றாம் கட்டமாக அதாவது இறுதியாக மாநில தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் பற்றிய விரிவான விவரங்கள் மற்றும் தேர்தல் குறித்த பொதுவான சந்தேகங்கள் அதில் முடிந்தவரையில் தங்களுக்கு புரியும் வகையில் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநில சங்கத் தலைவர் தேர்தல் முடிந்த உடன், உடனே பதவி பிரமாணமும் செய்து வைக்கப்படும்.
அதன் விவரத்தை கீழே கேள்வி- பதில் என்ற முறையில் விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபேசி பயன்படுத்துபவர்கள், பதிலை அறிய கேள்வி வரியை திரையில் தொடவும்.
கிளை சங்கம் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தேர்தலை நடத்தி முடிப்பார்கள்.
அங்கிருந்து தேர்ந்து எடுக்கப்படும் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் 3 மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட தலைவரை தேர்ந்து எடுக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
இந்த 6 நபர்களும் தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெற்றவர்கள்.
(உ.த.) ஒரு மாவட்டத்தில் 4 கிளை சங்கங்கள் இருப்பின், ஒவ்வொன்றில் இருந்தும் 6 நபர்கள் வீதம் 4 மாவட்டத்திற்கு 24 நபர்கள், புதிய மாவட்ட நிர்வாகம் அமைய தகுதி பெறுகிறார்கள்.
இதிலிருந்து ஒருவர் மாவட்ட தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.
மேற்கூறிய யாவும் கிளை சங்கங்கள் கொண்ட மாவட்ட சங்கங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
பதில்: விண்ணப்ப படிவம் 28-12-2025 முதல் 04-01-2026 வரை வழங்கப்படும். வேட்பாளர் விண்ணப்ப படிவத்தை பெற்றவுடன் அன்றே பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
பொதுவான அலுவலக நேரங்களில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். வேட்பாளரின் விண்ணப்ப படிவம் வழங்கலும், தாக்கலும் அந்தந்த மாவட்ட சங்க அலுவலகத்தில் நேரில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம் அந்தந்த மாவட்ட சங்கத்தின் முடிவுக்குட்பட்டது.
2026-2029 வாக்காளர் பட்டியலை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
பதில்: விண்ணப்ப படிவம் 07-02-2026 முதல் 09-02-2026 வரை 3 நாட்களுக்கு வழங்கப்படும். வேட்பாளர் விண்ணப்ப படிவத்தை பெற்றவுடன் அன்றே பூர்த்தி செய்து, வைப்புத் தொகை ரூ. 10,000/- த்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும்.
07-ந் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரையும், 08-ந் தேதி பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் மற்றும் 09-ந் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரையும் விண்ணப்ப படிவம் வழங்கப்படும்.
வேட்பாளரின் விண்ணப்ப படிவம் வழங்கலும், தாக்கலும் தமிழ்நாடு பத்மசாலியர் சங்கத்தின் பதிவு பெற்ற அலுவலகமான சென்னை - 600 028, மந்தைவெளி, 35/16, வி.சி. கார்டன் முதல் தெருவில் நடைபெறும்.
👉 2026-2029 வாக்காளர் பட்டியலை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், தேர்தல் ஆணையர்களை தொடர்பு கொண்டு
சந்தேகத்தினை நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.
தேர்தல் தேதி அறிவிப்பு நாள்: 08-12-2025